/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர் போட்டியிட முடிவுஅ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர் போட்டியிட முடிவு
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர் போட்டியிட முடிவு
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர் போட்டியிட முடிவு
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர் போட்டியிட முடிவு
சேலம்: சேலத்தில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஜெ.,பேரவை துணை செயலாளர், சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, 58வது கோட்டத்தை சேர்ந்த கறிக்கடை பழனி தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நீக்கப்பட்ட விஸ்வநாதன், குப்புசாமி, கோட்ட கவுன்சிலர் பாண்டியன், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் கண்ணன் இளங்கோ, மாணவரணி செல்வம், இளைஞரணி சங்கர், மகளிரணி செல்வி, தொழிற்சங்க விஜயகுமார், துணை செயலாளர் கோவிந்தராஜ், பழனிசாமி, சவுந்திரராஜன் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கறிக்கடை பழனி கூறியதாவது: எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட, பொதுமக்கள் பேராதரவோடு கோட்ட உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு, முதல்வர் ஜெ., காலில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்பேன். என்மீது அவதூறு பரப்பி, முதல்வருக்கு தெரியாமலேயே என்னை நீக்கப்பட்டது குறித்து, புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இச்சம்பவம், சேலம் அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.