கைப்பற்றிய கடல் அட்டைகளை பறிகொடுத்த வனக்காப்பாளர்கள் : 100 பேர் மீது வழக்கு
கைப்பற்றிய கடல் அட்டைகளை பறிகொடுத்த வனக்காப்பாளர்கள் : 100 பேர் மீது வழக்கு
கைப்பற்றிய கடல் அட்டைகளை பறிகொடுத்த வனக்காப்பாளர்கள் : 100 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 17, 2011 01:15 AM
கீழக்கரை : ராமநாதபுரம் அருகே பெரியபட்டிணத்தில் கடல் அட்டை கடத்தலை தடுக்க சென்ற வனக்காப்பாளர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
கடல் அட்டைகளை பறித்து, கடத்தியவரை தப்பிக்க விட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெரியபட்டிணத்தில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவுபடி, வனக்காப்பாளர்கள் ராஜசேகர், பண்டாரம், சந்தானம், பழனிச்சாமி, தமிழ்செல்வன், மாரிமுத்து ஆகியோர் பெரியபட்டிணம் சென்றனர். அனீஸ் என்ற வியாபாரியை கைது செய்தனர். இவரிடமிருந்த 50 கிலோ அட்டைகளை கைப்பற்றினர். அப்போது அப்பகுதி மீனவர்கள் திரண்டு வந்து, வனக்காப்பாளர்களை வழிமறித்து, கடல் அட்டைகளை பறித்துக் கொண்டனர். அனீசை தப்பி ஓட விட்டனர். இது குறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு விரைந்து வனக்காப்பாளர்களை மீட்டார். இதுகுறித்து வனக்காப்பாளர்கள், திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தனர். அ.தி.மு.க., கிளை செயலாளர் அனீஸ் உட்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.