/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தீ விபத்தில் வீடுகள் சேதம் நிவாரண உதவி வழங்கல்தீ விபத்தில் வீடுகள் சேதம் நிவாரண உதவி வழங்கல்
தீ விபத்தில் வீடுகள் சேதம் நிவாரண உதவி வழங்கல்
தீ விபத்தில் வீடுகள் சேதம் நிவாரண உதவி வழங்கல்
தீ விபத்தில் வீடுகள் சேதம் நிவாரண உதவி வழங்கல்
ADDED : ஆக 05, 2011 03:15 AM
விருத்தாசலம் : மேட்டுக்காலனியில் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு
தாசில்தார் நிவாரண உதவிகள் வழங்கினார்.விருத்தாசலம் மேட்டுக்காலனியில்
நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்
அப்பகுதியை சேர்ந்த வரதராஜன், தண்டபாணி, பழமலை ஆகியோரது வீடுகள் தீயில்
எரிந்தன.இதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.
இதில்
பாதிக்கப்பட்டு வீடு இழந்த 3 குடும்பத்திற்கும் தாசில்தார் சரவணன் அரசின்
நிவாரண உதவிகளை வழங்கினார். தலா ரூபாய் 2 ஆயிரம் மற்றும் வேட்டி, சேலை
உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.ஆர்.ஐ., பிரபாகரன், தேவசிநேகம், வி.ஏ.ஓ.,
ராஜேஸ்வரன், உதவியாளர் பிச்சப்பிள்ளை உட்பட பலர் உடனிருந்தனர்.