Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சேதமடைந்த கழிவு நீர் குழாய் சீரமைக்கக் கோரி மனு

சேதமடைந்த கழிவு நீர் குழாய் சீரமைக்கக் கோரி மனு

சேதமடைந்த கழிவு நீர் குழாய் சீரமைக்கக் கோரி மனு

சேதமடைந்த கழிவு நீர் குழாய் சீரமைக்கக் கோரி மனு

ADDED : ஆக 30, 2011 12:17 AM


Google News
கோவை : செல்வபுரம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், தேசமடைந்துள்ள கழிவுநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதிவாழ் மக்கள் சார்பில் தொழில்துறை அமைச்சர் வேலுமணியிடம் மனு அளித்தனர்.மனுவில், செல்வபுரம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பழைய கழிவுநீர் குழாய்கள் மிகவும் சேதம் அடைந்து கழிவுநீர் வெளியே செல்ல முடியாத அளவுக்கு ரோட்டில் வழிந்தோடுகிறது; துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், அந்த பகுதியில் உள்ள சாக்கடை நீர் செல்லும் வழியில் கழிவுநீர் குழாயை அமைத்து உள்ளனர். மேற்படி சேதம் அடைந்த பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி விட்டு புதியதாக பெரிய அளவில் உள்ள கழிவுநீர் குழாய்களை அமைத்தால் கழிவுநீர் தேங்காமல் செல்லும். மேற்படி பகுதிகளில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் குடியிருப்பு சுவர்கள் ஈரம் கசிவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெண்ணிலா மருத்துவமனை ரோடு பகுதியில் மைந்துள்ள'அ' முதல் 'ஓ' வரையுள்ள பழைய கட்டடங்கள் மற்றும் 'ஏஏ' முதல் 'இசட்' வரையுள்ள கழிவுநீர் குழாய்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us