/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பாபநாசத்தில் பென்ஷனர் சங்க முப்பெரும் விழாபாபநாசத்தில் பென்ஷனர் சங்க முப்பெரும் விழா
பாபநாசத்தில் பென்ஷனர் சங்க முப்பெரும் விழா
பாபநாசத்தில் பென்ஷனர் சங்க முப்பெரும் விழா
பாபநாசத்தில் பென்ஷனர் சங்க முப்பெரும் விழா
ADDED : செப் 25, 2011 11:56 PM
பாபநாசம்: பாபநாசத்தில் நடந்த வட்டார பென்ஷனர் சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பாபநாசம் வட்டார பென்ஷனர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா, சங்கத்தின் வெள்ளி விழா மற்றும் 75 வயது நிரம்பிய பென்ஷனர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா, பாபநாசம் முத்தையா திருமண மண்டபத்தில், சங்க தலைவர் கந்த சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. தஞ்சை மாவட்ட தலைவர் வெங்கிட்டு முன்னிலை வகித்தார். துணைதலைவர் கூத்தரன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் சுப்பு தங்கராசன் ஆண்டறிக்கை வாசித்தார். சுப்ரமணியன் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். விழாவில் மாநில தலைவர் சாகுல் ஹமீது கலந்து கொண்டு, பென்ஷனர் சங்க விரிவுபடுத்தப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டியும், சங்கங்கள் நடந்து கொள்ளவேண்டிய நடைமுறைகள் பற்றியும் பேசினார்.
விழாவில் ஓய்வூதியவருக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை ஒரு லட்சமாக வழங்கக்கோரியும், ஒப்படைப்பு தொகை பிடிக்கும் காலத்தை 10 ஆண்டு காலமாக குறைத்து ஆணை வழங்ககோரியும், பாபநாசம் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில், பென்ஷனர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.