/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 27, 2011 11:55 PM
கும்பகோணம்: பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க கோரி பி.எஸ்.என்.எல்.,
ஊழியர்கள் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் பி.எஸ்.
என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
பி.எஸ்.என்.எல்., தொழிற் சங்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழுவைச் சேர்ந்த
ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்திற்கு பி.எஸ். என்.எல்., தொழிலாளர்
சங்கத் தைச் சேர்ந்த பக்கிரிநாதன், சஞ்சார்காம் தொழிலாளர் சங்கத்தைச்
சேர்ந்த தங்கபம், தேசிய தொலைதொடர்பு சம்மே ளத்தைச் சேர்ந்த ராஜராஜன்
ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் பி.எஸ். என்.எல்., தொழிலாளர் சங்க
மாவட்ட செயலாளர் குருசாமி விளக்கவுரை யாற்றினார். போராட்டத்தில், பி.எஸ்.
என்.எல்., விருப்ப ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும். போனஸ் வழங்க வேண்டும்.
பறிக்கப்பட்ட சலுகைகளான விடுப்பை காசாக்குதல், மருத்துவப்படி ஆகியவற்றை
திரும்ப வழங்க வேண்டும். பஞ்சப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் குறித்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.