/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாநகராட்சி அலுவலகம் முன் தனியார் துப்புரவு பணியாளர் கூலி உயர்வு கோரி போர்க்கொடிமாநகராட்சி அலுவலகம் முன் தனியார் துப்புரவு பணியாளர் கூலி உயர்வு கோரி போர்க்கொடி
மாநகராட்சி அலுவலகம் முன் தனியார் துப்புரவு பணியாளர் கூலி உயர்வு கோரி போர்க்கொடி
மாநகராட்சி அலுவலகம் முன் தனியார் துப்புரவு பணியாளர் கூலி உயர்வு கோரி போர்க்கொடி
மாநகராட்சி அலுவலகம் முன் தனியார் துப்புரவு பணியாளர் கூலி உயர்வு கோரி போர்க்கொடி
ADDED : செப் 13, 2011 02:06 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட வார்டுகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் கூலி உயர்வு வழங்கக்கோரி, நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் முன், குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுக்கு முன், சேலம் மாநகராட்சியில் உள்ள இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33 47 ஆகிய 21 வார்டு துப்புரவு பணி, பெங்களூரை சேர்ந்த ஸ்வச்சதா கார்ப்ரேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டது. தனியார் நிறுவனத்திடம் 800 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த ஆண்டு ஒப்பந்த காலம் முடிந்தது. ஏற்கனவே, தனியார் பராமரிப்பில் இருந்த, 21 வார்டுகள் ரமணா ரெட்டி என்ற தனியார் நிறுவனத்திடம் ,ஒப்படைக்கப்பட்டது.தினக்கூலி அடிப்படையில் பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு, ஒரு நாள் கூலியாக, 80 ரூபாய் வழங்கப்படுகிறது. குறைவான கூலி வழங்குவதால், அதிருப்தி அடைந்த துப்புரவு பணியாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தனியார் நிறுவனம் சார்பில், துப்புரவு பணியாளர்களுக்கான கூலி தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கூலி உயர்வு வழங்கப்படவில்லை. அதிருப்தி அடைந்த, 21 வார்டு துப்புரவு பணியாளர்களும், நேற்று மாநகராட்சி மைய அலுவலகம் முன் குவிந்தனர். துப்புரவு பணியாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.துப்புரவு பணியாளர்கள் கூறியதாவது:தினமும், 80 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனத்திடம் கேட்டால், பி.எஃப்., தொகை பிடித்தம் செய்யப்படுவதாக கூறுகின்றனர். ஏற்கனவே, எங்களுக்கு மாதம், 3,500 ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்தனர். பி.எஃப்., தொகை பிடித்தம் செய்தது போக, அவர்கள் கூறிய தொகையை வழங்கினால் கூட எங்களால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். கூலி உயர்வு வழங்கக்கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு கூறினார்.