/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புள்ளிவிவர சேகரிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகல்வியியல் செயற்கைகோள் திட்டத்தில் ஒளிபரப்புபுள்ளிவிவர சேகரிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகல்வியியல் செயற்கைகோள் திட்டத்தில் ஒளிபரப்பு
புள்ளிவிவர சேகரிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகல்வியியல் செயற்கைகோள் திட்டத்தில் ஒளிபரப்பு
புள்ளிவிவர சேகரிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகல்வியியல் செயற்கைகோள் திட்டத்தில் ஒளிபரப்பு
புள்ளிவிவர சேகரிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகல்வியியல் செயற்கைகோள் திட்டத்தில் ஒளிபரப்பு
ADDED : செப் 14, 2011 01:38 AM
கோவை:பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கான தேசிய அளவிலான உத்தேச
திறன் பயிற்சி, கல்வியியல் செயற்கைகோள் ஒலி, ஒளிபரப்புத் திட்டத்தின் கீழ்
இன்று காலை 10.00 மணிக்கு வழங்கப்படுகிறது.டில்லி கல்வி திட்டமிடல் மற்றும்
நிர்வாகம் சார்ந்த தேசிய பல்கலை சார்பில் நடக்கும் இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட தகவல் தொடர்பு முறைமை பொறுப்பானவர்கள், குறுவளமைய
ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி
முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், புள்ளியியல் அலுவலர்கள்
ஆகியோருக்காக நடத்தப்படுகிறது.
புள்ளி விவரம் சேகரிப்பு படிவத்தை உரிய
பொறுப்பானவர்கள் சிறந்த முறையில் பிழையில்லாமல் பூர்த்தி செய்தல், மாவட்ட
கல்வி தகவல் புள்ளிவிவரம் முறைமையில் தொடர்புடையவர்கள் நல்ல முறையில்
பங்கெடுத்தல், மாவட்ட கல்விதகவல் புள்ளிவிவர முறைமைக்காக புள்ளிவிவர
சேகரிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய உரியவர்களுக்கு பயிற்சியளித்தல், புள்ளி
விவர சேகரிப்பு படிவத்தை பூர்த்திசெய்யும் போது, பொதுவாக ஏற்படும் பிழைகளை
அறிந்து நீக்குதல் மற்றும் கூர்ந்தாய்வு செய்தல், புள்ளி விவரங்கள்
சேகரிப்பு படிவத்தை பூர்த்திசெய்வது குறித்த அனுபவங்களை பகிர்ந்து
கொள்ளுதல் போன்றவை குறித்து கலந்துரையாடல் நடக்கிறது.பங்கேற்பாளர்கள்
அனைவரும் அருகிலுள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலை ஒலி, ஒளிபரப்பு
பெறும் மையத்தில் ஆங்கில மொழிவழியான கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
பங்கேற்கலாம். இந்நிகழ்ச்சி, டி.டி.எச்., முறையில் வீடு, அலுவலகத்தில்
நேரடியாக கியான் தர்சன் 'டிவி' மூலமும் ஒளிபரப்பப்படுகிறது.'டிவி' மாநாட்டு
நிகழ்ச்சி www.ignou.ac.in என்ற இணையதளத்தில் டையட், வட்டார வளமையங்கள் மூலம் நேரடியாக பார்க்கலாம்.
நிகழ்ச்சியில் ஏற்படும் சந்தேகங்களை 011-29532844, 29532845, 1800-112-345
ஆகிய எண்களில் அழைக்கலாம்.


