/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டாஸ்மாக் ஊழியர் ஊதியம் உயர்வு அரசு அறிவிப்பால் பெரும் ஏமாற்றம்டாஸ்மாக் ஊழியர் ஊதியம் உயர்வு அரசு அறிவிப்பால் பெரும் ஏமாற்றம்
டாஸ்மாக் ஊழியர் ஊதியம் உயர்வு அரசு அறிவிப்பால் பெரும் ஏமாற்றம்
டாஸ்மாக் ஊழியர் ஊதியம் உயர்வு அரசு அறிவிப்பால் பெரும் ஏமாற்றம்
டாஸ்மாக் ஊழியர் ஊதியம் உயர்வு அரசு அறிவிப்பால் பெரும் ஏமாற்றம்
ADDED : செப் 13, 2011 01:53 AM
ஈரோடு : மாநில அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறைந்த சம்பளத்தை உயர்த்தி அறிவித்தது, பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது, என சி.ஐ.டி.யூ., டாஸ்மாக் தொழிற்சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 6,690 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகிறது. மேற்பார்வையாளர்கள் 6,670 பேர், விற்பனையாளர்கள் 16 ஆயிரத்து 758 பேர் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் பணி செய்கின்றனர்.டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. பணி பாதுகாப்பின்மை, அதிகாரிகள் வெறுப்பில் ஊழியர்கள் பணி நீக்கம், கப்பம் கட்டினால் மீண்டும் வேலை என பல இன்னல்களுடன் உள்ள ஊழியர்கள், தங்களை அரசு ஊழியராக்கி, சம்பளம், சலுகைகளை உயர்த்தி வழங்க கோரி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்கள் அ.தி.மு.க., அரசால் நியமிக்கப்பட்டதால், தி.மு.க., அரசு கண்டு கொள்ளவில்லை. இருந்தும் டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தரம், ஊதியம் உயர்வு கோரிக்கை தொடர்ந்தது. தொழிற்சங்கங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல், தி.மு.க., அரசை போலவே, மேற்பார்வையாளருக்கு 500 ரூபாய், விற்பனையாளருக்கு 400 ரூபாய், உதவியாளருக்கு 300 ரூபாய் ஊதிய உயர்வு, விடுமுறை நாட்களை மூன்று நாள் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளை களைய விற்பனையை கணினிமயப்படுத்தி, சென்சார் கருவி மூலம் பில் அளிக்க ஏற்பாடு செய்யவில்லை. மாநில அரசின் இதர பொதுத்துறை நிறுவனங்களை காட்டிலும், அதிக வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்கான தெளிவான கொள்ளை முடிவை அளிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க முன்வராவிட்டால், அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்போவதாக சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.