ADDED : ஆக 02, 2011 12:54 AM
அவலூர்பேட்டை : கோவில்புரையூர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் களப்பயணம்
மேற்கொண்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் செல்லப்பன் தலைமையில் அவலூர்பேட்டை
காவல் நிலையம், போஸ்ட் ஆபீஸ், ஸ்டேட் பாங்க் மற்றும் ஆரம்ப சுகாதார
நிலையத்தில் மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள்
பதிவு செய்வது, போஸ்ட் ஆபீசில் சேமிப்பு, தபால் பட்டுவாடா மற்றும் ஸ்டேட்
வங்கியில் ஏ.டி.எம்., செயல்பாடு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் நலம்
பேணுதல் உள்ளிட்டவைகளை மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.ஆசிரியர்கள்
அண்ணாதுரை, மோகன், வெங்கிடேசன், சுதர்சன், ஜெய்கணேஷ் உடனிருந்தனர்.