Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பிரப் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் 80 அடி சாலை கட்டி முடிக்கப்பட்டும் தனியார் ஆக்ரமிப்ப

பிரப் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் 80 அடி சாலை கட்டி முடிக்கப்பட்டும் தனியார் ஆக்ரமிப்ப

பிரப் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் 80 அடி சாலை கட்டி முடிக்கப்பட்டும் தனியார் ஆக்ரமிப்ப

பிரப் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் 80 அடி சாலை கட்டி முடிக்கப்பட்டும் தனியார் ஆக்ரமிப்ப

ADDED : செப் 27, 2011 12:14 AM


Google News

உள்ளதை மீட்கவில்லை.

கனி மார்க்கெட்டில் ஜவுளி வணிக வளாகம் அமைக்க மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும், திறக்கவில்லை. காலிங்கராயன் சுற்றுலா மாளிகை உள்ளிட்ட இடத்தில் 60 அடி சாலை அமைத்தும் திறக்கப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை முழுமை செய்யவில்லை. ஆனால், தொழில் வரியை மட்டும் 500 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். தே.மு.தி.க., கவுன்சிலர் கோவேந்தன்: நகராட்சி என்ற பெயரின் முன்பு 'மா' என்று சேர்த்து, 'மாநகராட்சி' என்றாக்கியது மட்டுமே சாதனை. மிக கடுமையாக வரி உயர்வு செய்தனர். வீடு, கடைகளின் வாடகை அதிகமானது. வார்டுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்கி பணி ஆணை வழங்கியும் அதைக்கூட நிறைவேற்றவில்லை. மேயரால் எந்தவொரு பயனுமில்லை. செயல்படாத மாநகராட்சியாக இருந்தது.



அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில்: மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின் வரியினங்கள் மட்டுமே கடுமையாக உயர்ந்து, வீட்டு வாடகை 200 மடங்கு அதிகரித்தது. வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடக்கவில்லை. பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு தரமற்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை. மாநகராட்சி நினைவு தூணில் உள்ள கடிகாரம் பல ஆண்டாக பழுதாகி நிற்கிறது. அதைக்கூட சரிசெய்யவில்லை.



காங்கிரஸ் பிரமுகர் அர்ஷத்: மாநகராட்சி 28 வது வார்டு செங்கோடன் வீதி இன்றளவும் மண் சாலையாகத்தான் உள்ளது. மாநகராட்சியில் எங்கும் முழுமையான சாலை வசதியில்லை. மாநகர் முழுவதும் நாய் தொல்லை தீர்ந்தபாடில்லை.



ஜவுளித் தொழிலதிபர் சதாசிவம்: 12வது வார்டில் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் கவுன்சிலராக உள்ளார். அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு பின் வார்டு பகுதியில் பார்த்ததே இல்லை. மாநகரப் பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பையாக கிடக்கிறது.



சுமை தூக்கும் தொழிலாளர் ஆறுமுகம்: மாநகராட்சியான பின், வீட்டு வாடகை தான் கடுமையாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் கூலி வேலை செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு பயன்படும் நல்லத் திட்டங்கள் உருப்படியாக செய்யப்படவில்லை.



என்ன சொல்கிறார் மேயர்?



மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் கூறியதாவது: ஐந்தாண்டில் மாநகரின் 16 இடங்களில் 1.7 கோடி ரூபாய் செலவில் உயர் மின்விளக்கு கோபுரம், 13 இடங்களில் சிறிய மின்விளக்கு கோபுரம், 218 புதிய தெருவிளக்கு, 80 மைய திட்டு தெருவிளக்குகள், 75 இடங்களில் மின் சிக்கன விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கருங்கல்பாளையத்தில் 73 லட்சம் ரூபாய், பெரியார் நகரில் 60 லட்சம் ரூபாய் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. நேதாஜி வணிக வளாகம் 2.46 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 91 லட்சம் ரூபாய் செலவில் பூங்காக்கள் பராமரிப்பு, 6.51 கோடியில் கல்வி மேம்பாட்டு பணி செய்யப்பட்டுள்ளன.



ஆர்.கே.வி.சாலையில் 90 லட்சம் ரூபாய் செலவில் 90 கடைகள் கட்டப்பட்டுள்ளது. புதுமைக்காலனி, செங்குட்டுவன் காலனி ஆகிய இடங்களில் 20 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சிக் கூடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.



பஸ் ஸ்டாண்டில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உள்பட 4.3 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. 48 லட்சம் ரூபாய் செலவில் மினி பஸ் ஸ்டாண்டு அமைக்கப்படுகிறது. நான்கு கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. தாய்சேய் நல விடுதி நவீன மகப்பேறு மருத்துவமனையாக தரம் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க 1.6 கோடி ரூபாய் செலவில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. 209 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஐந்தாண்டில் 135.91 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us