கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை:பெண்களிடம் 12 சவரன் நகை கொள்ளை
கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை:பெண்களிடம் 12 சவரன் நகை கொள்ளை
கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை:பெண்களிடம் 12 சவரன் நகை கொள்ளை
ADDED : செப் 09, 2011 06:14 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே, கோவில் திருவிழாவில், 3 பெண்களிடம் 2.5 லட்ச ரூபாய்மதிப்புள்ள, 12 சவரன் நகைகளைத் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த புத்தூர் கிராமத்தில் உள்ள சாலைக்கரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தின் போது, திருமயிலாடி புஷ்பா,60, என்பவரிடம் இருந்து 6 சவரன் தங்க செயின், புத்தூர் கோவிந்தம்மாள்,65, என்பவரிடமிருந்து 3 சவரன் செயின், ராதா என்பவரிடம் இருந்து 3 சவரன் தங்க செயினை பறித்துள்ளனர். இதன் மதிப்பு 2.5 லட்ச ரூபாயாகும்.இதுகுறித்து, கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிந்து, 12 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.