ADDED : ஆக 09, 2011 01:06 AM
கீழக்கரை : முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பேரவை துவக்க விழா கல்லூரி செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது.
முதல்வர் பேராசிரியர் ஞானப்பிரகாசம் வாழ்த்தி பேசினர். பின்னர் கட்டுரை வாசித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கணிதத்துறை தலைவர் பிலோமின் வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர் ரூபக்குமார் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் கஸ்தூரி நன்றி கூறினார்


