/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டரிடம் மனுடாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 09, 2011 01:10 AM
சிவகங்கை : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மதுபானக்கடையை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில்,இளையான்குடி தாலுகா முனைவென்றி கிராமத்தில் உள்ள அறிவொளிநகர் குடியிருப்பு பகுதியில் ஆதிதிராவிட சமுகத்தினர் குடியிருந்து வருகின்றனர். குடியிருப்பின் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதனை சுற்றி தென்னிந்திய திருச்சபை, அங்கன்வாடி மையம், மாணிக்க வாசகர் கோயில், பொதுமக்கள் அன்றாடம் பயன்பாட்டிற்குரிய அனைத்து இடங்களும் உள்ளது. குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் பெண்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை கலெக்டர் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடவேண்டும். இங்குள்ள டாஸ்மாக் கடை இளையான்குடி தாலுகா வாணி கிராமத்தில் செயல்பட்டது. அங்கு எதிர்ப்பு கிளம்பியதால் இங்கு மாற்றியுள்ளனர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


