/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம்,திருக்கோவிலூரில் மூப்பனார் நினைவு தினம்விழுப்புரம்,திருக்கோவிலூரில் மூப்பனார் நினைவு தினம்
விழுப்புரம்,திருக்கோவிலூரில் மூப்பனார் நினைவு தினம்
விழுப்புரம்,திருக்கோவிலூரில் மூப்பனார் நினைவு தினம்
விழுப்புரம்,திருக்கோவிலூரில் மூப்பனார் நினைவு தினம்
ADDED : ஆக 30, 2011 10:53 PM
திருக்கோவிலூர் : விழுப்புரம், திருக்கோவிலூரில் காங்., சார்பில் மூப்பனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
விழுப்புரம் காந்தி சிலை அருகே மூப்பனார் படத்திற்கு காங்., கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
நகர காங்., தலைவர் குலாம்மொய்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர்கள் தயானந்தம், செல்வராஜ், துணைத் தலைவர் ராமதாஸ், இளைஞர் காங்., தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சங்கர், ஆறுமுகம், ரவிசிங், ரவிகிருஷ்ணன், ஜெயந்தி, பாபாஜி, கீதா, விஜயகுமாரி, அகமது உட்பட பலர் கலந்து கொண்
டனர். திருக்கோவிலூர்: மூப்பனாரின் படத்திற்கு திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொழிலதிபர் கார்த்திகேயன் தலைமையில் காங்., நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். ஒன்றிய சேர்மன் அலமேலு, முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் ரவிக்குமார், கோபு, மோகன், நிர்வாகிகள் மதன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


