Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/விஜய்ஸ்ரீ புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனருக்கு விருது

விஜய்ஸ்ரீ புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனருக்கு விருது

விஜய்ஸ்ரீ புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனருக்கு விருது

விஜய்ஸ்ரீ புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனருக்கு விருது

ADDED : ஆக 29, 2011 01:07 AM


Google News
சேலம் : இன்ஜினியரிங் கட்டுமானத்துறையில் சாதனைப் படைத்த விஜய்ஸ்ரீ புரமோட்டர்ஸ் ராஜேந்திரனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

சேலம், கோவை, பெங்களூர், சென்னை நகரங்களில் அப்பார்ட்மெண்ட், கல்வி நிறுவனம், கமர்சியல் காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி கட்டிடங்கள் பணியை, இன்ஜினியரிங் துறையில், 20 ஆண்டுகள் அனுபவமுள்ள ராஜேந்திரன் தலைமையில், தென்னிந்தியாவின் தலைசிறந்த கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான விஜய்ஸ்ரீ புரமோட்டர்ஸ், விஜய்ஸ்ரீ பில்டர்ஸ் மற்றும் ஆர்.பி.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு கடந்த 10ம் தேதி டில்லியில், எக்னாமிக் குரோத் சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் சார்பில், சிறந்த தொழில் முனைவோருக்கான 'பாரத் புஸ்கர்' விருது வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங், கல்விச் சேவை, மருத்துவச் சேவை, பல குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் டாக்டர் ராஜேந்திரனுக்கு விருதை வழங்கி கவுரவித்தார். சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், விஜய்ஸ்ரீ புரமோட்டர்ஸ் நிறுவனம், சேலம் மாநகரில் இதுவரை யாரும் செய்திராத வகையில், 300 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பை கட்ட உள்ளது. ஜிம், நீச்சல்குளம், பூங்கா, ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் தியேட்டர் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் அமைய உள்ளதாக தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us