Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

ADDED : அக் 02, 2011 11:57 PM


Google News

சின்னமனூர் : உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா,34.

அரசு பஸ் டிரைவராக உள்ளார். இவரது மனைவி செல்வி,30. செல்வியின் தந்தை உத்தமபாளையம் சர்வே துறையில் பணியாற்றி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.

இதற்கான பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டுவிட்டு, டாடா சுமோ காரில், அவரை கோட்டூரில் உள்ள அவரது வீட்டில் இளையராஜாவும், செல்வியும் கொண்டு போய் விட்டனர். அங்கிருந்து கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு திரும்பினர். இளையராஜா காரை ஓட்டினார். சின்னமனூர் கண்ணம்மாள் கோயில் அருகே வந்த போது, நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது. இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த செல்வி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சின்னமனூர் இன்ஸ்பெக்டர் உலகநாதன் விசாரிக்கிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us