/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் "அபேஸ்'டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் "அபேஸ்'
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் "அபேஸ்'
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் "அபேஸ்'
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் "அபேஸ்'
ADDED : அக் 01, 2011 11:06 PM
திருவள்ளூர் : ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து, 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது.
இக்கடையின் மேற்பார்வையாளரான காரணை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்பாபு, 35, நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றார்.நேற்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். இதுகுறித்து, அருகில் உள்ள கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், டாஸ்மாக் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் உள்ளே புதைத்து வைத்திருந்த லாக்கரும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், அதற்குள் வைத்திருந்த மதுபானங்களின் விற்பனைத் தொகையான, 2 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது.கடைக்குள் விற்பனைக்காக வைத்திருந்த சரக்குகளை சரி பார்த்ததில் மது வகைகள் திருடு போகவில்லை. எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியிலேயே, டாஸ்மாக் கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.ஏற்கனவே நடந்த கொள்ளை முயற்சி: இந்த டாஸ்மாக் கடையில் கடந்த ஜனவரி 30ம் தேதி, இரவு மேற்பார்வையாளர் பிரகாஷ்பாபு வழக்கம்போல பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, ஷட்டரில் இருந்த மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.கடம்பத்தூர் போலீசார் வந்து கடையை திறந்து பார்த்தபோது, கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள சரக்குகள் மற்றும் பணம் அனைத்தும், திருடு போகாமல் அப்படியே இருந்தது. இவ்வாறு இக்கடையில் ஏற்கனவே கொள்ளை நடந்துள்ளது.ரோந்து பணிக்கு போலீசார் செல்வார்களா?கடம்பத்தூர் போலீஸ் நிலையம் உள்ள, அதே சாலையில் ரயில் நிலையம் அருகிலேயே டாஸ்மாக் கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.இச்சாலையில் எப்போதும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் உள்ள நிலையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா என்பது கேள்விக் குறியாக உள்ளது. இனியாவது, போலீசார் ரோந்து செல்கிறார்களா என்பதை உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.


