/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் ஜீ பூம்பா! அற்புத அமர்க்களம் : தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' துவக்கம்கோவையில் ஜீ பூம்பா! அற்புத அமர்க்களம் : தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' துவக்கம்
கோவையில் ஜீ பூம்பா! அற்புத அமர்க்களம் : தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' துவக்கம்
கோவையில் ஜீ பூம்பா! அற்புத அமர்க்களம் : தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' துவக்கம்
கோவையில் ஜீ பூம்பா! அற்புத அமர்க்களம் : தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' துவக்கம்
ADDED : செப் 29, 2011 11:11 PM
கோவை : 'ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அசத்தலான மூன்று கண்காட்சிகளா...? எங்கே...? எப்போ...? எப்படி சாத்தியம்...?' என கடந்த சில நாட்களாக ஆர்வமுடன் காத்திருந்த கோவை மக்களின் கேள்விகளுக்கு விடை விரிகிறது இன்று.
கோவை மக்களை குஷிப்படுத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இன்று காலை துவங்குகிறது. கோவை மக்களின் ரசனை அறிந்து ஒவ்வொரு ஆண்டும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கண்காட்சியை நடத்தி வருகிறது 'தினமலர்' நாளிதழ். ஆண்டுதோறும் இக்கண்காட்சியில் அரங்குகளை அமைக்க வர்த்தக நிறுவனங்களும், பொருட்களை பார்த்து, பார்த்து வாங்க பொதுமக்களும் முந்திக் கொண்டு திரள்வது வரலாறு ஆக மாறி வருகிறது. இந்த ஆண்டு கூடுதல் போனஸ் ஆக, ஆட்டோமொபைல்ஸ் மற்றும் கட்டுமானப் பொருட்களின் கண்காட்சியையும் சேர்த்து ஒரே கூரையின் கீழ் பார்க்கலாம்...வாங்கலாம்... இறுதியில் சுவைமிக்க உணவு வகைகளை ருசிக்கலாம்! 'தினமலர்' நாளிதழ்,எல்ஜி., நிறுவனம் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி, இன்று காலை 10.00 மணிக்கு துவங்குகிறது. கோவையை பொருத்தவரையில் ஒவ்வொரு பொருளுக்கும் நகரின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கடைகளை தேடிப் போக வேண்டும். இந்த சிரமத்தை தவிர்க்க ஆடை, பர்னிச்சர், அழகு சாதனப் பொருட்கள், சமையல் பொருட்கள்... இப்படி வீட்டுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசியப் பொருட்களையும் 250க்கு மேற்பட்ட ஏ.சி., அரங்குகளில் சோர்வில்லாமல் ஜாலியாக வாங்கலாம். வீடானாலும் அலுவலகமானாலும் நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டி முடிக்க அதற்கான பொருட்களும், நிபுணர்களின் ஆலோசனையும் தேவை. 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி வளாகத்திலேயே கட்டட கட்டுமானப் பொருட்களுக்கான கண்காட்சியும் உண்டு. பர்னிச்சர், பைப் பிட்டிங்ஸ், சோலார் வாட்டர் ஹீட்டர், சானிட்டரி வேர், ஜெனரேட்டர், சிசிடிவி கேமரா, முறுக்கு கம்பிகள், உள் அலங்கார பொருட்கள், திரைச்சீலைகள், சோபா விரிப்புகள் ஆகியவற்றை இங்கு வாங்கலாம். அத்துடன் நிலம் வாங்கவும் வீடு கட்டவும் உதவும் ரியல் எஸ்டேட் மற்றும் பில்டர் நிறுவனங்களும் உங்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இவர்களுடன், மக்களின் நம்பிக்கையை பெற்ற டிவிஎஸ், ஹோண்டா, செவர்லெட், மகிந்திரா, ஹீரோ, ஆம்பியர் உள்ளிட்ட வாகன நிறுவனங்களும் உங்களை வரவேற்க பிரமாண்ட அரங்குகளில் காத்திருக்கின்றனர். சீரியசான ஷாப்பிங் மட்டும் இருந்தால் போரடிக்காதா என்ன...? ஷாப்பிங் நேரம் முழுவதும் சேலையைப் பிடித்து இழுத்தபடி தொண தொணத்துக் கொண்டே வரும் உங்கள் குட்டீஸ்களுக்கு காத்திருக்கிறது சூப்பர் டிரீட்! ஆழ் கடலின் அதிசயங்களான துள்ளும் வண்ண மீன்களின் அழகிய கண்காட்சியும், கலர் கலரான வெளிநாட்டு பறவைகள், லேபரடார், அல்சேஷன், பொமரேனியன், பக் போன்ற நாய்களின் கண்காட்சியும் மிரட்டும் திகில் மாளிகையும் அசத்தப்போகிறது அவர்களை! அச்சு அசலாக அவர்களை பார்த்தவுடன் வரைந்து, வாய் பிளக்க வைக்க ரகளையான ஆர்ட்டிஸ்டுகளும் ஆஜர். பெண்களை குஷிப்படுத்த பிரத்யேக பிரிவே உள்ளது. இங்கு மெகந்தி, அழகுக்கலை சமாச்சாரங்களை அமர்க்களமாக அனுபவிக்கலாம். அப்புறம்...மெள்ள இந்த பக்கம் வந்தாலே பிரியாணி, ரோஸ்ட், மொறு மொறு வடை, சூடான பஜ்ஜி உள்ளிட்ட உணவு வகைகளின் கமகமக்கும் மணம் பசியால் கிள்ளும் வயிற்றை சுண்டி இழுக்கும். இப்படி இன்றைய முழு நாளையும் இந்த த்ரீ இன் ஒன் 'நான் ஸ்டாப்' கொண்டாட்டத்துக்கு ஒதுக்கி வச்சுருங்க! ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். அப்புறம் என்ன...அக்டோபர் 3ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடக்கும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியை அனுபவிக்க குடும்பத்தோட வாங்க...!