ADDED : ஆக 09, 2011 01:10 AM
காரைக்குடி : காரைக்குடி வ.உ.சி., ரோடு அருகே நாடார் தெரு பாலசுப்பிரமணியன் மகன் சீனிவாசன் (25).
பொறியியல் படித்த இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு12 மணிக்கு காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டிற்கு டூ வீலரில் சென்றபோது, போலீஸ் முதல் பீட் அருகில் எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்தில் பலியானார் (ஹெல்மெட் அணியவில்லை). இன்ஸ்பெக்டர், ராஜேந்திரன் விசாரிக்கிறார்.


