/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சுவர் விளம்பரங்களால்பெயின்டர்களுக்கு வரவேற்புசுவர் விளம்பரங்களால்பெயின்டர்களுக்கு வரவேற்பு
சுவர் விளம்பரங்களால்பெயின்டர்களுக்கு வரவேற்பு
சுவர் விளம்பரங்களால்பெயின்டர்களுக்கு வரவேற்பு
சுவர் விளம்பரங்களால்பெயின்டர்களுக்கு வரவேற்பு
ADDED : அக் 05, 2011 01:26 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் கிராம பகுதிகளில்
சுவர் விளம்பரங்கள் அதிகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பெயின்டர்களுக்கு
வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17
மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டமாக நடக்கிறது. சட்டசபை தேர்தலில்
சுவர் விளம்பரங்கள் செய்ய தேர்தல் கமிஷன் கடுமையான கட்டுப்பாடுகளை
விதித்திருந்தது. அதே போல் தற்போதைய உள்ளாட்சி தேர்தலிலும் சுவர்
விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.நகராட்சி மற்றும்
பேரூர் பகுதியில் வேட்பாளர்கள் சுவர் விளம்பரங்கள் செய்ய தடை
விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம பஞ்சாயத்து
வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்கள் போட்டிக்கு
கிராம பகுதியில் சுவர் விளம்பரங்கள் செய்ய தடையில்லை.
இந்த தேர்தலில் கிராம பகுதி மக்கள் நான்கு ஓட்டு போட வேண்டியது
இருப்பாலும், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு
கட்சி சின்னங்கள் கிடையாது என்பதாலும், மக்கள் மத்தியில் சின்னங்களை
பிரபலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், கிராம பகுதியில்
தேர்தல் சுவர் விளம்பரங்கள் பரபரப்பாக எழுதப்பட்டு வருகிறது. கடந்த
காலங்களில் சின்னங்களை தகடுகளில் அடித்து வர்ணங்கள் அடித்து விளம்பரம்
செய்யப்படுவது உண்டு. அந்த நிலை மாறி தற்போது, சட்டசபை தேர்தல் போல்
சுவர்களில் பெயர்களை மெகா சைஸ் எழுதி விளம்பரப்படுத்துவது அதிகரித்து
வருகிறது.உள்ளாட்சி சுவர் விளம்பரங்களால் பெயின்டர்களுக்கு வேலை வாய்ப்பு
கிடைத்துள்ளது. பெயின்டர்கள் குறிப்பிட்ட வேட்பாளர்களிடம் ஒப்பந்த
அடிப்படையில் வேலைகளை பெற்று சின்னங்கள் வரைவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால், மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பெயின்டர்கள்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


