/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/புதிய தமிழகம் கட்சியினர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணிபுதிய தமிழகம் கட்சியினர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
புதிய தமிழகம் கட்சியினர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
புதிய தமிழகம் கட்சியினர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
புதிய தமிழகம் கட்சியினர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
விளாத்திகுளம்:நாகலாபுரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர்.புதூர் யூனியன் புதிய தமிழகம் கட்சி பிறந்த மண் அறக்கட்டளை சார்பாக நீர்நிலைகள், இயற்கை வளங்கள், விளைநிலங்களை காத்திடுதல், மாசுவை போக்கி ஊரை தூய்மைப்படுத்துதல் உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் நடந்தது.
பேரணிக்கு புதூர் ஒன்றிய செயலாளர் சிவசெல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் அரசனி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நாகலாபுரம் பஸ் ஸ்டாப் மற்றும் முக்கிய வீதிகளில் சென்றது. இந்த பேரணியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெயமுருகன், ஒன்றிய இணை செயலாளர் காளிராஜ், ஒன்றிய மாணவரணி தலைவர் வெள்ளையன், தொண்டரணியை சேர்ந்த தானியேல்பாண்டியன், காளிராஜன், மாவட்ட பிரதிநிதிகள் காளிதாஸ், முனியசாமி, நாகலாபுரம் நகர தலைவர் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.