கள்ளச்சாராய வியாபாரிக்கு "குண்டாஸ்'
கள்ளச்சாராய வியாபாரிக்கு "குண்டாஸ்'
கள்ளச்சாராய வியாபாரிக்கு "குண்டாஸ்'
ADDED : செப் 27, 2011 11:55 PM
தஞ்சாவூர்: கள்ளச்சாராய வியாபாரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்
சிறையில் அடைக்க கலெக்டர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.
தஞ்சை மாவட்டம்
பட்டுக்கோட்டையை அடுத்த உதயசூரியபுரம் கழுகுபுலிக்காடு கிராமத்தை
சேர்ந்தவர் தங்கராசு மகன் ஆசை என்கிற ஆசைத்தம்பி. கள்ளச்சாராய வியாபாரி.
தொடர்ந்து இவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பட்டுக்கோட்டை
மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பதிவு செய்த வழக்குகளின்
அடிப்படையில் மாவட்ட எஸ்.பி அனில்குமார் கிரி பரிந்துரையின் பேரில்
ஆசைத்தம்பியை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர்
பாஸ்கரன் உத்தரவிட்டார்.