யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சுவனரேவா
யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சுவனரேவா
யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சுவனரேவா

நியூயார்க்:யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் சுவனரேவா, ஸ்டோசுர் உள்ளிட்டவர்கள் காலிறுதிக்கு முன்னேறினர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதன் முதல் செட்டை 6-2 என சுவனரேவா எளிதாக வென்றார். 2வது செட்டிலும் தொடர்ந்து அசத்திய இவர், 6-3 என கைப்பற்றினார். இறுதியில் 6-2, 6-3 என்ற நேர்செட்கணக்கில் வெற்றி பெற்ற சுவனரேவா காலிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்டோசுர் அபாரம்:மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர், ரஷ்யாவின் கிரிலென்கோவை 6-2, 6-7, 6-3 என போராடி வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதியில் போபண்ணா: ஆண்கள் இரட்டையர் 3வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் அல் குரேஷி ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஹென்லே, பெல்ஜியத்தின் நார்மன் ஜோடியை 6-2, 6-3 என்ற செட்கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. பெண்கள் இரட்டையர், மூன்றாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி, செக்குடிரயசின் பெனிசோவா, பார்பொரா ஜோடியிடம், 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்ந்தது.
தடுமாறி விழுந்தார் நடால்:நியூயார்க்கில் வெயில் கடுமையாக உள்ளது.இதனால் வீரர்கள் விரைவில் சோர்வாகின்றனர்.மூன்றாவது சுற்று போட்டியில் வென்ற நடால், நேரடியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மிகவும் களைப்புடன் காணப்பட்ட நடால், கழுத்தை முன்னும் பின்னும் அசைத்த படியே இருந்தார். இடது கையால் முகத்தை மூடிய அவர், பத்திரிகையாளர்களைப் பார்த்து, கேள்வி கேட்பதை நிறுத்துமாறு கூறிவிட்டு, திடீரென தனது சேரில் இருந்து கீழே விழுந்தார். உடனடியாக எழுந்த நடால், 'ஐஸ் பேக்கை' கொண்டு வலியுடன் இருந்த கால் பிடிப்புகளில் ஒத்தடம்கொடுத்தார். பின்பு நடால் கூறுகையில்,'' போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என்றாலும், இந்த சம்பவம் இங்கு நடந்தது துரதிருஷ்டவசமானது,'' என்றார்.