/உள்ளூர் செய்திகள்/கரூர்/தோண்டப்பட்ட குழியால் பொதுமக்கள் கடும் அவதிதோண்டப்பட்ட குழியால் பொதுமக்கள் கடும் அவதி
தோண்டப்பட்ட குழியால் பொதுமக்கள் கடும் அவதி
தோண்டப்பட்ட குழியால் பொதுமக்கள் கடும் அவதி
தோண்டப்பட்ட குழியால் பொதுமக்கள் கடும் அவதி
ADDED : செப் 16, 2011 12:13 AM
க.பரமத்தி: க.பரமத்தி கடைவீதி பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாக்கடை அமைக்க தொடங்கப்பட்ட பணி இழுத்தடித்து வருவதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.பரமத்தி சாலையின் மையப்பகுதியில் இருபுறமும் 'டீ' கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் கழிவுநீர் செல்ல சாக்கடை கட்ட நான்கு அடி அகலத்துக்கு சுமார் 10 அடி அகலமும், ஏழு அடி ஆழமும் கொண்ட மெகா குழி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் பணியை விரைந்து முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அந்த வழியாக வாகனங்களை ஓட்டி செல்ல முடியாதபடி, குறிப்பாக நடக்க கூட முடியாத அளவுக்கு உள்ள மெகா பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைகின்றனர். அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் வியாபாரம் சரிவர இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 'க.பரமத்தி கடைவீதி பகுதியில் உடனடியாக சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


