/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெல் கொள்முதல் நிலையங்களில்காலியிட பணிக்கு நேர் காணல்நெல் கொள்முதல் நிலையங்களில்காலியிட பணிக்கு நேர் காணல்
நெல் கொள்முதல் நிலையங்களில்காலியிட பணிக்கு நேர் காணல்
நெல் கொள்முதல் நிலையங்களில்காலியிட பணிக்கு நேர் காணல்
நெல் கொள்முதல் நிலையங்களில்காலியிட பணிக்கு நேர் காணல்
ADDED : செப் 16, 2011 12:22 AM
கடலூர்:கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கான
கொள்முதல் கிளார்க் மற்றும் உதவியாளர், வாட்ச்மேன் பணிகளுக்கான நேர்காணல்
கடலூர் நுகர்பொருள் வாணிப்பக்கழக அலுவலகத்தில் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில்
அரசு சார்பில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை அரசே கொள்முதல் செய்ய
வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல்
நிலையங்கள் அமைக்கப்பட்டு அறுவடை சீசன்களின் நெல் கொள்முதல்
செய்யப்படுகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் நெல்கொள்முதல் செய்வதற்கான
இடங்களில் காலியாக உள்ள கிளார்க், உதவியாளர், வாட்சிமேன் உள்ளிட்ட
பதவிகளுக்கு தலா 100 பேர் வீதம் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம், தகவல்
அனுப்பட்டது.
அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்றோருக்கு நேற்று காலை முதல் நேர்
காணல் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்
கழக அலுவலகத்தில் நடந் தது. நேர்காணலை இதற்கான தேர்வு கமிட்டியினர் செய்து
வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் நேர்காணலில்
பங்கேற்றனர்.


