/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி நகராட்சியில் கழிவுநீர் ஓடையை காணவில்லை : துணை சேர்மன் குற்றச்சாட்டுகோவில்பட்டி நகராட்சியில் கழிவுநீர் ஓடையை காணவில்லை : துணை சேர்மன் குற்றச்சாட்டு
கோவில்பட்டி நகராட்சியில் கழிவுநீர் ஓடையை காணவில்லை : துணை சேர்மன் குற்றச்சாட்டு
கோவில்பட்டி நகராட்சியில் கழிவுநீர் ஓடையை காணவில்லை : துணை சேர்மன் குற்றச்சாட்டு
கோவில்பட்டி நகராட்சியில் கழிவுநீர் ஓடையை காணவில்லை : துணை சேர்மன் குற்றச்சாட்டு
ADDED : செப் 03, 2011 01:47 AM
கோவில்பட்டி:கோவில்பட்டி நகராட்சியில் கழிவுநீர் ஓடையை காணவில்லையென
கவுன்சிலர்கள் கூட்டத்தில் துணை சேர்மன் குற்றம் சாட்டினார். மேலும் ராஜீவ்
கொலையாளிகள் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நகராட்சி
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்.,
கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து பரபரப்பு ஏற்படுத்தினர்.கோவில்பட்டி
நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு
சேர்மன் மல்லிகா தலைமை வகித்தார். துணை சேர்மன் சந்திரமவுலி, கமிஷனர்
மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கவுன்சிலர்கள் விவாதம்
துவங்கியது. அப்போது ராஜீவ் கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும் என மதிமுக கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசினார். இதற்கு மதிமுக
கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து திமுக., கவுன்சிலர்கள்
சார்பில் கருணாநிதி, ராமர், அதிமுக., சார்பில் முத்தையா, தேமுதிக.,
சார்பில் அய்யாத்துரை மற்றும் பல கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்ற ஆதரவு
தெரிவித்தனர். தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி காங்.,
கவுன்சிலர்கள் மதி, செல்வமணி, பேச்சிமுத்து, துணைசேர்மன் சந்திரமவுலி
ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும்
உள்ளே வந்த கவுன்சிலர் மதி தரையில் அமர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இது குறித்து சேர்மன் கேட்டபோது, தனது வார்டில் கழிப்பிடம் பழுதாகி பல
மாதங்கள் ஆகியும் சரிசெய்யவில்லை என்றும், புதியதாக கட்டப்பட்ட
பஸ்ஸ்டாப்பில் சேர் இல்லை என்றும் கூறினார். பரிசீலனை செய்து உடனடியாக
நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தில்
கலந்து கொண்டார்.
கவுன்சிலர் தவமணி தூத்துக்குடி மாநகராட்சிபோல் தெருவில்
குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை கோவில்பட்டியிலும்
கொண்டு வரவேண்டும் என்றார். இதே போன்று கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில்
உள்ள குறைகளை தெரிவித்ததற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் மற்றும்
அதிகாரிகள் தரப்பில் கூறினர். மேலும் கூட்ட அரங்கில் தேசிய தலைவர்கள் படம்
அமைக்கப்பட்டதற்கு கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவில்பட்டி
நகராட்சி துணை சேர்மன் சந்திரமவுலி பேசும்போது ஜோதிநகருக்கு மேற்குபகுதி
பாரதிநகருக்கு கிழக்கு பகுதி இவற்றிற்கு இடைபட்ட பகுதியில் கழிவுநீர்,
மழைநீர் செல்ல ஒரு ஓடை இருந்தது தற்போது அந்த ஓடையை காணவில்லை என்று
குற்றம் சாட்டி பேசினார். முன்னதாக புதிய சுகாதார ஆய்வாளர்களாக பொறுப்பேற்ற
சுரேஷ் கோவிந்தராஜன், சிதம்பர ராமானுஜம் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் மேலாளர் கணேசன், துப்புரவு அலுவலர் ராஜசேகரன், வருவாய்
ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், உதவி எழுத்தர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.