பெண்கள், ஆதிதிராவிடர் வார்டுகள் ஒரு பகுதியில் குவியலாக உள்ளது:அரசியல் கட்சிகள் ஆட்சேபனை
பெண்கள், ஆதிதிராவிடர் வார்டுகள் ஒரு பகுதியில் குவியலாக உள்ளது:அரசியல் கட்சிகள் ஆட்சேபனை
பெண்கள், ஆதிதிராவிடர் வார்டுகள் ஒரு பகுதியில் குவியலாக உள்ளது:அரசியல் கட்சிகள் ஆட்சேபனை
சென்னை:கிரேட்டர் சென்னையின் 200 வார்டுகளில், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள், ஒரே பகுதியில் குவியலாக இடம் பெற்றுள்ளதற்கு, அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 200 வார்டுகளில் எந்தெந்த பிரிவினர் போட்டியிடலாம் என, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு ஒதுக்கீடு செய்து, அந்த பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
200 வார்டுகளில், பெண்கள் அதிகம் உள்ள முதல் 58 வார்டுகளை தேர்வு செய்து, பெண்கள் வார்டுகளாகவும், ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ள முதல் 26 வார்டுகளை ஆதிதிராவிடர்களுக்கும், இதில், ஆதிதிராவிடர் பெண்கள் அதிகம் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர் பெண்களுக்கும் என ஒதுக்கியுள்ளனர்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட 200 வார்டுகளில், பரவலாக இல்லாமல், ஒரே பகுதியில் குவியலாக உள்ளது. ஒரு மண்டலத்தில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில், 15 வார்டுகளும் பெண்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டள்ளது. பொது பிரிவினர்களுக்கு இப்பகுதியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
வார்டுகள் பிரிப்பு குறித்து, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:
இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை பதிவு செய்துள்ள மாநகராட்சி, அவர்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி, பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீட்டை பரவலாக்க வேண்டும் என அரசுக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்து, மேயர் சுப்ரமணியம் கூறும் போது, 'பெண்கள், ஆதிதிராவிடர் வார்டு பிரிப்பு பற்றி, அறிவிப்பு வெளியிட்டு, ஆட்சேபனைகளை பெற்று, இறுதி செய்திருக்க வேண்டும் என கூறுகின்றனர். அரசு விதிகளை அமல் செய்யும் போது, அறிவிப்பு வெளியிட வேண்டியதில்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, அரசின் முடிவை பரிசீலிக்க வேண்டும் என, தீர்மானமாக அனுப்பியுள்ளோம்' என்றார்.அரசியல் கட்சிகளின் கோரிக்கை, வரவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்குள் ஏற்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள வார்டுகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.