/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
ADDED : ஆக 01, 2011 10:38 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவிலுள்ள ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், இரண்டொரு மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, மாவட்ட அளவில் தேர்தல் ஆணையர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் ஆணையருக்கு, ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒன்றியங்களில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிய பி.டி. ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த பழனிபிரபு மாவட்ட தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள் ளார். இந்த ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக (ஊராட்சிகள்) இருந்த அல்லாபிச்சை, ரெகுலர் பி.டி.ஓ.,வாகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கண்காணிப்பாளராக இருந்த குரு ராகவேந்திரா வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (ஊராட்சிகள்) மாற்றப்பட்டுள்ளார். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், பி.டி.ஓ.,வாக (வட்டார ஊராட்சிகள்) இருந்த ரேணுகாதேவி, மதுக்கரைக்கும், கிணத்துக்கடவு பி.டி.ஓ., சீனிவாசன், தெற்கு ஒன்றியத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். அன்னூர் பி.டி. ஓ., விஜயசங்கர், கிணத்துக்கடவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்ட பி.டி.ஓ.,க் கள் அந்தந்த ஒன்றியங்களில் பொறுப்பேற்றனர்.