/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கோவில் திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை முடிவை எதிர்த்து பண்ருட்டி தாலுகா அலுவலகம் முற்றுகைகோவில் திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை முடிவை எதிர்த்து பண்ருட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை
கோவில் திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை முடிவை எதிர்த்து பண்ருட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை
கோவில் திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை முடிவை எதிர்த்து பண்ருட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை
கோவில் திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை முடிவை எதிர்த்து பண்ருட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை
பண்ருட்டி : பண்ருட்டி அருகே கோவில் திருவிழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை முடிவை எதிர்த்து ஒரு தரப்பினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.பண்ருட்டி அடுத்த ப.ஆண்டிக்குப்பம் மாரியம்மன் கோவில் திருவிழாவை தனபால் தரப்பினர் ஆண்டுதோறும் கொடியேற்றி நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை 12 பேர் கொண்ட குழுவினர் செய்த போது மீண்டும் தேவராஜ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ., முருகேசனை சந்தித்து அப்பகுதி மக்கள் விழாவிற்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து நேற்று பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அனந்தராம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.கூட்டத்தில், கோவில் கொடியேற்றம் இருதரப்பினர் முன்னிலையில் அர்ச்சகர் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த தனபால் தரப்பினர், இந்த பேச்சுவார்த்தையை ஏற்க முடியாது.விழா குழுவினர்கள் யாரும் கூட்டத்தில் அனுமதிக்காமல் தீர்மானித்ததை ஏற்க முடியாது என மறுத்து தாலுகா அலுவலக வாயில் முன்பு 50 பெண்கள் உள்பட 100 பேர் திடீரென முற்றுகையிட்டனர்.இதுகுறித்து தாசில்தார் அனந்தராம், இன்று (28ம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் விசாரணை நடத்தி தீர்வு காண்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து முற்றுகையை விலக்கிக் கொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் தாலுகா அலுவலகத்திற்கு 30 நிமிடம் பணிகள் பாதித்தது.


