பாகிஸ்தானுக்கான நிதியுதவியை ரத்து செய்தது அமெரிக்கா
பாகிஸ்தானுக்கான நிதியுதவியை ரத்து செய்தது அமெரிக்கா
பாகிஸ்தானுக்கான நிதியுதவியை ரத்து செய்தது அமெரிக்கா
UPDATED : ஜூலை 11, 2011 04:21 PM
ADDED : ஜூலை 11, 2011 04:02 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியிலான வழங்கவிருந்த நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்தது.
இந்த நிதியுதவி தங்களுக்கு தேவையில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பேராராட்டத்தில் ஈடுபட அந்நாட்டிற்கு அமெரிக்கா நிதியுதவி செய்து வந்தது. இந்த நிதியுதவி தங்களுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக இந்தியா புகார் கூறியிருந்தது. இந்நிலையில் தங்கள் மண்ணிலிருந்து தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும், வெளியேறவும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கூறியுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 800 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வெளிநாடுகளின் நிதியுதவி தேவையில்லை. சுவாத் மற்றும் வஜீரிஸ்தானில் எந்தவித உதவியுமில்லாமல் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம் என கூறியுள்ளது.