ADDED : செப் 11, 2011 10:58 PM
குஜிலியம்பாறை : வேடசந்தூர்-கூம்பூர், கோவிலூர் தார் ரோடு செப்பனிடும் பணி நடந்துவருகிறது.
வேடசந்தூரில் இருந்து கூம்பூர், கோவிலூர் செல்லும் தார்ரோடு போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாதநிலையில் சேதமடைந்திருந்தது. ரோடுகள் ஆங்காங்கே வெட்டப்பட்டு பள்ளமாகவும், ரோடு ஓரத்தில் அரை அடி பள்ளமும் இருந்ததால் போக்குவரத்து பாதி ப்பும், அடிக்கடி விபத்துகளும் நடந்தது. இது குறித்து 'தினமலர்' இதழில் சென்ற வாரம் செய்தி வெளியானது. இந்நிலையில் இயந்திரங்களை கொண்டு ரோட்டின் பக்கவாட்டில் உள்ள பள்ளம் மண் மூலம் சேதமடைந்த பகுதிகளை பஞ்சர் ஒர்க் பார்க்கப்பட்டது.