/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : செப் 04, 2011 09:37 PM
திருத்தணி : திருத்தணி தொகுதி ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு, புதிய வாக்காளர்கள் சேர்த்தல் குறித்து பயிற்சி வகுப்பை ஆர்.டி.ஓ., நடத்தினர்.
திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், தொகுதியில் உள்ள, 267 ஓட்டுச் சாவடி மைய அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது எப்படி குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் மணி வரவேற்றார். திருத்தணி ஆர்.டி.ஓ., ரவீந்திரன் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் வரும் 1ம் தேதி முதல் நடக்க உள்ளது. செப்டம்பர் 1ம் தேதியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்வதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பூர்த்தி செய்யவில்லை என்றால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதே போல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கல், இடமாற்றம் போன்றவை இருந்தாலும் அதற்கான விண்ணப்பம் பெற்று மாற்றிக் கொள்ளலாம். முக்கியமாக ஓட்டுச் சாவடி அலுவலர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் நபர்களின் விண்ணப்பத்தை வாங்கி, 18 வயது நிரம்பியவர்களா, உரிய ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதா, விண்ணப்பம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் வரும் ஜனவரியில் வெளிவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். பின்னர் மீண்டும் ஜனவரி முதல் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம் வழங்கப்படும். இவ்வாறு ரவீந்திரன் கூறினார். இதில், 267 ஓட்டுச் சாவடி அலுவலர்கள் மற்றும் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.


