ADDED : செப் 28, 2011 12:47 AM
ஈரோடு: தபால் துறை கோவை மண்டல அளவிலான பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் கோவையில் அக்டோபர், 24ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.
அஞ்சல் துறை சேவை குறித்து கோட்ட அளவில் தீர்க்கப்படாத பொதுமக்களின்
குறைகள், கோரிக்கைகள் அங்கு கேட்டறியப்படும். எனவே, பொதுமக்களின் புகார்,
மனுக்களை தபால் மூலம் அக்டோபர் 12ம் தேதிக்குள், 'உதவி அஞ்சல் துறை தலைவர்
(ஊழியர்கள்), மேற்கு மண்டலம், கோவை 641002,' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.இத்தகவலை ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.