/உள்ளூர் செய்திகள்/சேலம்/பொய் வழக்கு தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்பொய் வழக்கு தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்
பொய் வழக்கு தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்
பொய் வழக்கு தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்
பொய் வழக்கு தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்
ADDED : செப் 14, 2011 01:21 AM
சேலம்: ''தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவது தொடர்ந்தால், போராட்டம் வெடிக்கும்,'' என, சேலத்தில், மாஜி தி.மு.க., எம்.பி., கம்பம் செல்வேந்திரன் பேசினார்.தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன், தி.மு.க., ஆட்சியில் நிலத்தை பறிகொடுத்தவர்கள், போலீஸில் புகார் அளிக்கலாம் என்றும், அதற்கென நிலம் மீட்புக்குழு அலுவலகம் ஒன்றும் மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் என, ஜெயலலிதா அறிவித்தார்.அதைத்தொடர்ந்து, மிரட்டி நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, கருப்பசாமி பாண்டியன் மற்றும் மாஜி எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டு, சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்தவே, கட்சி நிர்வாகிகளை, அ.தி.மு.க., அரசு கைது செய்கிறது என, முன்னாள் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குற்றம்சாட்டினர்.சேலம் மாவட்ட செயலாளரும், முன்னாள் வேளாண் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் வெளியில் வரமுடியாத அளவில், தொடர்ந்து அவர் மீது போலீஸார் பொய் வழக்குப்பதிவு செய்து வருவதாக கூறி, சேலம் கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.முன்னாள் எம்.பி., கம்பம் செல்வேந்திரன் தலைமை வகித்தார்.அவர் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வெற்றியை தகர்க்க வேண்டும் என்பதற்காகவே, முன்னாள் அமைச்சர்கள் மீது, அ.தி.மு.க., அரசு பொய் வழக்கு போடுகிறது. தி.மு.க.,வினருக்கு சிறைவாசம் ஒன்றும் புதிதல்ல. கட்சியினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.உண்ணாவிரதத்தில், வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு, மகள்கள் மகேஸ்வரி, நிர்மலா, மருமகள் பிருந்தா மற்றும் பேத்திகள் என குடும்பத்தினர் பங்கேற்றனர். கட்சி சார்பில், செல்வகணபதி எம்.பி., மாஜி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மேயர் ரேகாபிரியதர்ஷினி, மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம், மாநகர செயலாளர் கலையமுதன், அவைத்தலைவர் சுபாஷ், டாக்டர் சூடாமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.