/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரோடு வசதி இல்லாமல் ரயில் பாதையில் ஆபத்து பயணம்ரோடு வசதி இல்லாமல் ரயில் பாதையில் ஆபத்து பயணம்
ரோடு வசதி இல்லாமல் ரயில் பாதையில் ஆபத்து பயணம்
ரோடு வசதி இல்லாமல் ரயில் பாதையில் ஆபத்து பயணம்
ரோடு வசதி இல்லாமல் ரயில் பாதையில் ஆபத்து பயணம்
ராஜபாளையம் நகராட்சி 39 வார்டில் புதியபஸ்ஸ்டாண்ட் அருகே உள்ளது ஐ.என்.டி.யு.சி., நகர்.
சக்திராஜா: சோழபுரம், பச்சைமடம், எம்.ஆர்.,நகர், முகில்வண்ணம்பிள்ளை தெரு மாணவர்கள் ஐ.என்.டி.யு.சி.,நகர் பின்புறம் உள்ள ரயில்வே கீழ்பாலம் வழியாக செல்கின்றனர். சத்திரப்பட்டி ரோடு ரயில்வேகேட் மூடினால், இந்த வழியாக தான் மக்கள் செல்கின்றனர். இங்கு கழிவுதண்ணீர் தேங்கி நடக்க முடியாத நிøல் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ரோடு அமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். ராமசாமி: விரிவாக்க பகுதிகளில் வாறுகால், தார்ரோடு வசதி இல்லை. இரவில் செல்லும் மக்கள் தடுமாறுகின்றனர். ஐ.என்.டி.யு.சி.நகர் நகராட்சியில் இருந்தாலும், மின்இணைப்பு கிராம பகுதியில் இருந்து கிடைக்கிறது. கிராமங்களில் ஏதாவது பணி நடந்தால், இங்கு பலமணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. இங்கு மின்பிரச்னை என்றால், கிராமங்களில் இருந்து ஊழியர்கள் வருகின்றனர். வோல்டேஜ் பிரச்னை அதிகம் உள்ளது. சிவகுமார்: 300 ரேஷன் கார்டுகள் இருந்தும் இங்கு ரேஷன் கடை இல்லை. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரியதெரு, எம்.ஆர்.,நகர், முகில்வண்ணம்பிள்ளை தெரு கடைகளுக்கு செல்கின்றனர். ரேஷன் கடை அமைய இதற்கான இடம் தர பலரும் தயாராக இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
-நமதுசிறப்பு நிருபர்-