/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உண்டு உறைவிடப் பள்ளியில் எம்.எல்.ஏ., மோகன் திடீர் ஆய்வுஉண்டு உறைவிடப் பள்ளியில் எம்.எல்.ஏ., மோகன் திடீர் ஆய்வு
உண்டு உறைவிடப் பள்ளியில் எம்.எல்.ஏ., மோகன் திடீர் ஆய்வு
உண்டு உறைவிடப் பள்ளியில் எம்.எல்.ஏ., மோகன் திடீர் ஆய்வு
உண்டு உறைவிடப் பள்ளியில் எம்.எல்.ஏ., மோகன் திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2011 11:21 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் உண்டு உறைவிடப் பள்ளியில் எம்.
எல்.ஏ., மோகன் சோதனை மேற்கொண்டார். சங்கராபுரம் பூட்டை ரோட்டில் உள்ள அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் அரசு கொறடா மோகன் எம். எல்.ஏ., சோதனை மேற்கொண்டார். அப்போது பள்ளியில் வார்டன் 4 நாட்களாக பணியில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு சமைத்திருந்த மதிய உணவை பார்வை யிட்டார். சாம்பாரில் காய்கள் இல்லை.மட்டன் வழங்காமல் சிக்கன் மட்டும் வழங்குவதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு குறைந்த உணவு, படிக்கும் அறையில் மின்விசிறி வசதி இல்லாததால் கொசு தொல்லை, குளிக்கவும், குடிக்கவும் தண்ணீர் இல்லாததால் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது போன்ற பல்வேறு புகார்களை மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக மாண வர்களிடம் கூறினார். பின்னர் அங்கிருந்த வாட்ச்மேன், சமையலர்களிடம் ஒழுங்காக மாணவர்க ளுக்கு உணவு வழங்க வேண் டும், அடுத்த முறை வரும் போது புகார்கள் வரக் கூடாது என எச்சரித்தார். ஒன்றிய செயலாளர்கள் அரசு, ராஜசேகர், பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நாராயணன், குசேலன் உடனிருந்தனர்.


