Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வேளாண் மன்றச் சட்டம் நீக்கம் சட்டசபையில் மசோதா நிறைவேறியது

வேளாண் மன்றச் சட்டம் நீக்கம் சட்டசபையில் மசோதா நிறைவேறியது

வேளாண் மன்றச் சட்டம் நீக்கம் சட்டசபையில் மசோதா நிறைவேறியது

வேளாண் மன்றச் சட்டம் நீக்கம் சட்டசபையில் மசோதா நிறைவேறியது

ADDED : செப் 14, 2011 01:26 AM


Google News
சென்னை :வேளாண் மன்றத்தை உருவாக்க, முந்தைய அரசு கொண்டு வந்த சட்டத்தை, ரத்து செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.முந்தைய தி.மு.க., அரசு 2009ல், வேளாண் மன்ற சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

இதன்படி, வேளாண்மை படிப்பு முடித்தவர்கள், இந்த மன்றத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்களை தவிர, வேறு யாராவது இயற்கை விவசாயம் குறித்து, விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினால், அவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை போன்றவை விதிக்கப்படும்.இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், முந்தைய அரசு இதை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க., அரசு இந்த சட்டத்தை நீக்க முடிவு செய்தது. இதற்கான மசோதா, சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதா மீது, நேற்று ஆய்வு நடந்த போது, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து பேசினர். இதன்பின், அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இதையடுத்து, குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us