அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்பு
அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்பு
அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்பு

மதுரை தெற்குவெளி வீதியைச் சேர்ந்த எல்.ஐ.சி., அதிகாரி பிருத்விராஜ்.
சீராய்வு மனு: ஏற்கனவே சொக்கிகுளத்தைச் சேர்ந்த கல்பனா என்பவரது வீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில், அட்டாக் பாண்டியை, போலீஸ் காவலில் விட, முதலாவது மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் மறுத்துவிட்டார். அதை எதிர்த்து, இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தாக்கல் செய்த சீராய்வு மனு, நேற்று நீதிபதி ஆர்.மாலா முன் ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ரமேஷ் ஆஜரானார். மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
திருமங்கலத்தைச் சேர்ந்த சிவனாண்டி, மனைவி பாப்பா நிலத்தை அபகரித்த வழக்கில், தி.மு.க., நகர செயலர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் (சுரேஷ்பாபு), திருமங்கலம் ஒன்றிய சேர்மன் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் நகர செயலர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோரை போலீஸ் காவலில் விட மறுத்து, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, போலீஸ் சார்பில் தாக்கலான சீராய்வு மனுவும், இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வருகிறது.