/உள்ளூர் செய்திகள்/மதுரை/செயல்படாத மியூசியங்களால் வீண்செலவு :தொல்பொருட்களை ஆய்வு செய்வதும் குறைவுசெயல்படாத மியூசியங்களால் வீண்செலவு :தொல்பொருட்களை ஆய்வு செய்வதும் குறைவு
செயல்படாத மியூசியங்களால் வீண்செலவு :தொல்பொருட்களை ஆய்வு செய்வதும் குறைவு
செயல்படாத மியூசியங்களால் வீண்செலவு :தொல்பொருட்களை ஆய்வு செய்வதும் குறைவு
செயல்படாத மியூசியங்களால் வீண்செலவு :தொல்பொருட்களை ஆய்வு செய்வதும் குறைவு
ADDED : அக் 06, 2011 04:12 AM
மதுரை : தமிழகத்தில் 'அரசு மியூசியம்' என்ற பெயரில் பல மியூசியங்கள்
காட்சிப் பொருளாக இருப்பதால், வீண் செலவாகிறது.
தொல்லியல் பொருட்களை ஆய்வு
செய்வதும் குறைந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை மட்டும்
வைத்துக் கொண்டு, இன்றுவரை மியூசியங்கள் ஓ(ட்)டிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளாக தொல்பொருள் ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை.
ஆங்காங்கே சிலைகள், தாழிகள் கண்டெடுக்கப்பட்டால் கூட, மியூசிய அலுவலர்கள்
சென்று பார்ப்பதில்லை. மதுரையில் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அருகில் உள்ள பழங்கால சிலை இன்னமும் கேட்பாரற்ற நிலையில் உள்ளது. சில
வாரங்களுக்கு முன் வைகையாற்றில் விநாயகர் சிலை கண்டெடுத்தனர். அதையும்
ஆய்வு செய்யவில்லை. சென்னை, புதுக்கோட்டைக்கு அடுத்ததாக, மதுரையில் தான்
'டிக்கெட்' விற்பனை மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கிறது. அதுவும் காந்தி
மியூசிய வளாகத்தில் இருப்பதால், இதையும் பார்த்துச் செல்கின்றனர்.
விருதுநகர், பழநி, திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் பார்வையாளர்கள் மிகவும்
குறைவு. காலை முதல் மாலை வரை, ஊழியர்கள் உட்கார்ந்து பொழுதை கழிக்கின்றனர்.
ஒன்றுமே இல்லை : ராமநாதபுரம், திருநெல்வேலியில் சிலைகள் காணாமல் போனதால்,
பிற மாவட்டங்களில் உள்ள ஐம்பொன், பழங்கால சிலைகளை சென்னை மியூசியத்திற்கு
அனுப்பி விட்டனர். வெறுமனே ஓடுகளையும், சில நாணயங்களையும் திரும்ப திரும்ப
பார்ப்பது சலிப்பை ஏற்படுத்துவதால், பார்வையாளர்கள் குறைந்து
வருகின்றனர்.மதுரைக்கு நெருக்கடி: மதுரை மியூசியத்தின் ஒரு பகுதி, கடந்த 15
ஆண்டுகளாக இடிந்தநிலையில் பூட்டப்பட்டுள்ளது. இதையே பார்வையாளர்களுக்கு
மியூசியமாக வைக்கலாம். இவ்வளவு ஆண்டுகளில் எத்தனையோ கமிஷனர்கள்,
காப்பாட்சியர்கள் வந்தும் கட்டடத்தை புதுப்பிக்க யாரும் முயற்சிக்கவில்லை.
பாதி கட்டடத்தில் நெருக்கடியாக சிலைகளை வைத்துள்ளதால், ஒருவர் நிற்கும்
போது மற்றொருவர் செல்வது சிரமமாக உள்ளது. தென்மாவட்ட மியூசியங்களை
மதுரையுடன் ஒருங்கிணைத்து புதுப்பித்தால், பார்வையாளர்களை கவரமுடியும்.


