/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/செக்போஸ்ட்டில் ரெய்டு மூன்று ஊழியர் மீது வழக்குசெக்போஸ்ட்டில் ரெய்டு மூன்று ஊழியர் மீது வழக்கு
செக்போஸ்ட்டில் ரெய்டு மூன்று ஊழியர் மீது வழக்கு
செக்போஸ்ட்டில் ரெய்டு மூன்று ஊழியர் மீது வழக்கு
செக்போஸ்ட்டில் ரெய்டு மூன்று ஊழியர் மீது வழக்கு
ADDED : ஆக 11, 2011 11:44 PM
கோவை : க.க.சாவடி செக்போஸ்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 49 ஆயிரத்து 800 ரூபாய் சிக்கியது; மூன்று ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கோவை - பாலக்காடு ரோடு, க.க.சாவடியில் மோட்டார் வாகன செக்போஸ்ட் உள்ளது.
இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அதிகளவு லஞ்சம் கேட்பதாக கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு கூடுதல் எஸ்.பி.,சண்முகப்பிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உன்னிகிருஷ்ணன், கருணாகரன், ஜெரால்டு, சதாசிவம் ஆகியோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இரவு இரண்டரை மணி நேரம் நடந்த சோதனையில் கணக்கில் வராத 49 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, செக்போஸ்ட்டில் பணியாற்றிய மோட்டார் வாகன ஆய்வாளர் தயாளன் (52), உதவி ஆய்வாளர் கிருஷ்ணன்(45), உதவியாளர் சேவியர் (51) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.