ADDED : செப் 25, 2011 01:13 AM
ஈரோடு: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், நாளை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடக்காது.
மாவட்ட கலெக்டர் காமராஜ் அறிக்கை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிராமங்களில், கலெக்டர் தலைமையில் நடக்கும் மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டம், சிறப்பு குறைதீர் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட அனைத்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நாள் வரை நடக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.