பஸ் விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு
பஸ் விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு
பஸ் விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு
ADDED : செப் 18, 2011 11:56 PM
புதுடில்லி: 'பஸ் விபத்தில் சிக்கி, இரு கால்களை இழந்த பெண்ணுக்கு, 42 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி பஞ்சாபி பாக் பகுதியில் வசிப்பவர் சங்கீதா நந்தா,39.
இவர், 2006ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணியாற்றியபோது, தனியார் பஸ் மோதி, விபத்துக்குள்ளானார். விபத்தில் இரு கால்களையும் இழந்த அவர், மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின், செயற்கைக் கால்கள் பொருத்திக் கொண்டார். அதன்பின், 'பஸ் டிரைவரின் அலட்சியப் போக்கே, விபத்து ஏற்படக் காரணம். எனவே, நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' எனக் கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி சுவர்ணா காந்தா சர்மா, ''பஸ் டிரைவர் பிரிஜேஷ் குமார் அலட்சியம் காரணமாக, பஸ்சை அதீத வேகத்தில் ஓட்டியது, வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது அலட்சியத்தால், சங்கீதா தன் கால்களை மட்டுமல்லாமல், வாழ்க்கையையே இழந்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக, பல்வேறு நெருக்கடிகளையும் சந்தித்துள்ளார். எனவே, அவருக்கு பஸ்சுக்கான காப்பீடு எடுக்கப்பட்ட, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், 42 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்'' என, உத்தரவிட்டார்.