/உள்ளூர் செய்திகள்/தேனி/விளைநிலங்களுக்கு செல்ல கண்மாய் கரை பாதை தேவைவிளைநிலங்களுக்கு செல்ல கண்மாய் கரை பாதை தேவை
விளைநிலங்களுக்கு செல்ல கண்மாய் கரை பாதை தேவை
விளைநிலங்களுக்கு செல்ல கண்மாய் கரை பாதை தேவை
விளைநிலங்களுக்கு செல்ல கண்மாய் கரை பாதை தேவை
ADDED : ஜூலை 29, 2011 11:16 PM
தேவதானப்பட்டி : பொம்மிநாயக்கன்பட்டி புதுக்குளம் கண்மாய் அருகே உள்ள விளைநிலங்களுக்கு செல்வதற்கு கண்மாய் கரையில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியகுளம் தாலுகா, பொம்மிநாயக்கன்பட்டி புதுக்குளம் கண்மாய்க்கு அருகே 300 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்வதற்கு கண்மாயில் நீர் இல்லாத நேரங்களில் கண்மாய் வழியாக சென்று வருகின்றனர். நீர் தேங்கியுள்ள காலங்களில் தோட்டங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் 3 கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை கொண்டு செல்வதிலும், விளைந்த பொருட்களை வீட்டிற்கு எடுத்து வருவதற்கும் சிரமமாக உள்ளது. புதுக்குளம் கண்மாய் கரையில் பாதை அமைத்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.