/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அ.தி.மு.க., தேர்தல் பிரச்சாரம் துவக்கம்: அமைச்சர் பங்கேற்புஅ.தி.மு.க., தேர்தல் பிரச்சாரம் துவக்கம்: அமைச்சர் பங்கேற்பு
அ.தி.மு.க., தேர்தல் பிரச்சாரம் துவக்கம்: அமைச்சர் பங்கேற்பு
அ.தி.மு.க., தேர்தல் பிரச்சாரம் துவக்கம்: அமைச்சர் பங்கேற்பு
அ.தி.மு.க., தேர்தல் பிரச்சாரம் துவக்கம்: அமைச்சர் பங்கேற்பு
ADDED : அக் 03, 2011 03:10 AM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி சேர்மன் பதவிக்கு, அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் கரிகாலன் போட்டியிடுகிறார்.
நேற்று, நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில், தேர்தல் பிரச்சார துவக்க விழா நடந்தது.
எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான தங்கமணி பங்கேற்று, அ.தி.மு.க., வேட்பாளர்கள் கரிகாலன், 2வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் பழனிவேல் ஆகியோரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் காந்தி முருகேசன், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி, இலக்கிய அணி இணைச் செயலாளர் விஜய முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில், 16வது வார்டு வேட்பாளர் சம்பத், 19வது வார்டு வேட்பாளர் ஜெயலட்சுமி ஆகியோரை ஆதரித்து, திறந்த ஜீப்பில் சென்ற வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, வார்டு மக்களிடம், தீவிரமாக ஓட்டு சேகரித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, 5வது வார்டில் இரண்டு இடங்களில், தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


