/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்புவேட்பாளர் அறிமுகக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
ADDED : அக் 06, 2011 01:17 AM
புவனகிரி : புவனகிரி பேரூராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்
பதவிக்கு போட்டியிடும் அ.தி.முக., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
புவனகிரியில் நடந்தது.நகர செயலர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்டச்
செயலர் அருண்மொழித்தேவன், நகர அவைத் தலைவர் கனகராஜ், மாவட்ட மாணவரணி செயலர்
உமா மகேஸ்வரன், முன்னாள் நகர செயலர் தங்க மகாலிங்கம், நாகராஜ், திருஞானம்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வள்ளி
சச்சிதானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி
அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், 'புவனகிரி தொகுதிக்குப்பட்ட புவனகிரி
பேரூராட்சி மீண்டும் அ.தி.மு.க., கோட்டை என்பதை வரும் உள்ளாட்சித்
தேர்தலில் நிரூபிக்க வேண்டும். அதற்காக கட்சித் தொண்டர்கள் அனைவரும்
தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு அ.தி.மு.க.,
சார்பில் போட்டியிடும் தலைவர் மற்றும் வார்டு வேட்பாளர்கள் அனைவரையும்
வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.


