Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலம்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலம்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலம்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலம்

ADDED : ஜூலை 13, 2011 02:43 AM


Google News
ஏரல்:குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று கோலாகலமா க நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர் கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று நடந்தது. இலங்கை மன்னன் ராவணனால் ராமபிரானின் மனைவி சீதாபிராட்டி சிறை எடுத்துச் சென்ற போது தான் செல்லும் பாதை அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக, சீதாபிராட்டி தன்னுடைய முத்துமாலைகளை கழட்டி எறிந்ததாகவும், அந்த முத்துமாலையே முத்துமாலை அம்மன் என்ற அருள்நாயகியாக அனைவரும் பூஜித்துவரும் அன்பு தெய்வமாக ஆனது என்பது இந்த குரங்கணி கோவிலில் வரலாறாகும். இது தவிர மேலும் பல சிறப்புகள் இந்த கோவிலுக்கு உண்டு. இத்தகைய பிரசித்தி பெற்ற முத்துமாலை அம்மன் கோயிலின் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 10ம் தேதி தொடங்கியது. நேற்று ஆனிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடை நடந்தது. இதனை முன்னிட்டு முத்துமாலை அம்மன் தங்கமுக விசேஷ அலங்காரத்துடன் காட்சியளித்தார்.

நேற்று இரவு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் மற்றும் கயிறு சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று முன் தினம் முதலே கோயிலில் வந்து தங்கினர். குரங்கணி கோவில் ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாள் கொடைவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது. ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கோயில் கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்வராஜ், அறங்காவலர்கள் முத்துலிங்கம், கோசல்ராம், சேசவமூர்த்தி, நாராயணன் மற்றும் சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கம் மற்றும் நன்கொடையாளர்களும் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us