ADDED : ஆக 11, 2011 11:04 PM
சிதம்பரம் : வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பொருட் குழுக் கூட்டம் சி.முட்லூரில் நடந்தது.
சிதம்பரம் வேளாண் அலுவலர் சித்ரா தலைமை தாங்கி விவசாயிகள் பொருட் குழுவினர் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். ஊராட்சி தலைவர் தவமந்திரி முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் தனவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உதவி வேளாண் அலுவலர்கள் ராயப்பநாதன், ராயர், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.