ADDED : ஜூலை 25, 2011 10:30 PM
பெரியகுளம் : பெரியகுளத்தில் ஒரே நாளில் மர்மகும்பல் இரு இடங்களில் ஏழு பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் ஜீவன்ஜோதி நலமையம் உள்ளது. நேற்று அதிகாலை 2 மணிக்கு மூன்று பேர் கொண்ட கும்பல் கேட்டினை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த செவிலியர் சண்முகப்பிரியா (24) முகத்தை மூடி பீரோ சாவியை கேட்டனர். சண்முகப்பிரியா தர மறுத்துள்ளார். அங்கிருந்த இரண்டு பீரோக்களை உடைத்த மர்மக்கும்பல் நான்கரை பவுன் தங்கநகை, ஒரு ஜோடி கொலுசினை கொள்ளையடித்தனர். சண்முகப்பிரியாவை கீழே தள்ளினர். * லட்சுமிபுரம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (40), நேற்று அதிகாலை பாத்ரூம் சென்று விட்டு வீட்டிற்குள் சென்றார். அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க நகையை மர்ம கும்பல் பறித்து சென்றது. இரு கொள்ளையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். டி.எஸ்.பி., உமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.