ADDED : ஜூலை 11, 2011 09:38 PM
திருப்பூர் : திருப்பூரில் பூட்டியிருந்த வீட்டுக்குள் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர்கள், 13 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.திருப்பூர், தென்னம் பாளையம் துவக்கப்பள்ளி வீதியை சேர்ந்த ரத்தினசாமி மகன் குணசேகரன் (49).
இவர் வீட்டில் இல்லாதபோது, பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 1.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். மொத்த மதிப்பு 1.80 லட்சம் ரூபாய். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.